வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா!

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/Surya_Sivakumar_2010.jpg/220px-Surya_Sivakumar_2010.jpgதேசிய விருது வென்ற ‘ஆடுகளம்’ படத்தினை இயக்கிய வெற்றிமாறன் அடுத்து என்ன படம் செய்ய இருக்கிறார் என்று எதிர்ப்பார்ப்பு தமிழ் திரையுலகில் நிலவி வருகிறது. ‘மங்காத்தா’ படத்தினை தயாரித்த தயாநிதி அழகிரியின் நிறுவனமான க்ளவுட் நைன் நிறுவனத்தின் அடுத்த படத்தினை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் வெற்றி மாறன்.

நாயகன் யார், நாயகி யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தயாநிதி அழகிரி தனது டிவிட்டர் இணையத்தில் கூறிவந்தார்.
இந்நிலையில் வெற்றிமாறன் படத்தின் நாயகனாக நடிக்க இருக்கிறார் சூர்யா. தான் நடித்து வரும் ‘மாற்றான்’ படத்தின் பணிகள் முடிந்தவுடன் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

சொந்த மகனைப் போல பாசம் காட்டிய அம்மா! – அஜீத் உருக்கம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2z3yvBhB9SDvQ2FcxacxfltHOLkdQ_8cHXTCPerEIGZXFUkogAhxwyvr3siM1ZVdpQ2eBckT1nV4LSJ3NhZwU9yxRvVZSzM_man0eEZMg4FiaX0I9dQ4yH4to42XGn0BFzGZl0oeb9ww/s400/Warner_Ajith01.jpgசொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், “அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன். அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!,” என்று கூறியுள்ளார்.

திரையுலக விழாவில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாகக் கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, “ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!,” என்று கூறியுள்ளார்.
என் சாவுக்கு கூடும் கூட்டம்….
மேலும் அவர் கூறுகையில், “எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

சோனா பாலியல் பலாத்கார வழக்கு: எஸ்.பி.பி.சரணுக்கு 2 வாரம் இடைக்கால முன்ஜாமீன்

http://www.vanakkamindia.com/wp-content/uploads/2011/09/sona-spb-charan-22-09-11.jpg
மது விருந்தின்போது நடிகை சோனாவை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கு இரு வார இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால், முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என்றும் அவர் சாட்சியை கலைத்துவிடக்கூடும் என்றும் அரசு வக்கீல் சி.பாலசுப்பிரமணியம் வாதிட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “சரணுக்கு 2 வாரத்துக்கு இடைக்கால முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. வழக்கின் சாட்சிகளை கலைப்பதற்கு முயற்சிக்கக்கூடாது. மறுஉத்தரவு வரும்வரை தினமும் காலை 8 மணிக்கு பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சரண் கையெழுத்திட வேண்டும்.
ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் தொகையும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் அளித்து சரண் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்,” என்றார். முன்னதாக, எஸ்பிபி சரண் தன்னிடம் தவறாக நடந்ததற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறி அவற்றை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தார் சோனா.
மேலும் இன்று (வெள்ளிக்கிழமைக்குள்) சரண் தன்னிடம் மன்னிப்புக் கேட்டால் வழக்கை வாபஸ் வாங்குவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் சரண் இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை. இதற்கிடையே அவருக்கு முன்ஜாமீனும் கிடைத்துள்ளது.

வீட்டிலேயே சிலை விழுந்து வணங்கும் நடிகை

தற்போது ஸ்ரீகாந்துடன் பாகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜனனி அய்யர். அவன் இவன் படத்தில் அறிமுகமாகியிருந்த ஜனனிக்கு அடுத்த படம் கிடைக்க இத்தனை மாதங்கள் ஆகியிருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்று ஜனனியிடம் கேட்டால், கதை அமையணும்ல என்பார். ஆனால் நிஜக்காரணம் அதுவல்ல. தனது நிலைமை புரியாமல் அவர் கேட்ட சம்பளம்தான்.
ஒரு வழியாக இதையெல்லாம் அவர் உணர சுமார் ஆறு மாதங்கள் ஆகிவிட்டது Janani Iyerஎன்று வைங்களேன்... நாம் சொல்லப்போவது அவரது பக்தி பற்றி. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வாரம் தவறாமல் போய்விடுகிற பக்தை இவர். முன்பெல்லாம் இவர் போகும்போது ஃபிகரு சூப்பராயிருக்கே என்று ஒரு லுக் விட்டுவிட்டு அகன்று விடும் இளசுகள் கூட்டம், இப்போது உள்ளே போனால் ஒரு ஆட்டோகிராஃப் என்று பேப்பரை நீட்டுகிறார்களாம்.
இறைவனின் சன்னதியில் அவன் மட்டுமே பெரியவன். அங்கு போய் ஆட்டோகிராஃப் போட்டுக் கொண்டிருந்தால், இருக்கிற பிழைப்பும் பிரச்சனைதான் என்றெல்லாம் யோசித்த ஜனனி முன்பு போல் இப்போது கோவிலுக்கு போவதில்லை.
அப்புறம் எப்படி? மைலாப்பூர் கபாலீஸ்வரர் சிலையை தனது வீட்டிலேயே வாங்கி வைத்திருக்கிறாராம். நேரம் தவறாமல் பூஜையும் நடக்கிறது.
ஹன்சிகா மோத்வானி, டாப்ஸி மாதிரி பெரிய அந்தஸ்த்தை கொடுங்க சாமியோவ்..

கண் பார்வையில் பிரச்சனை கவலை ஏற்படுத்தும் ஸ்ருதிஹாசன்

7 ஆம் அறிவு படத்தில் ஸ்ருதியை பார்ப்பவர்கள் அது போஸ்டராக இருந்தால் கூட சூடம் கொளுத்தி கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். அத்தனை அழகு. மிக சமீபத்தில்தான் இப்படி ஒரு அழகுடன் மிளிர்கிறார் அவர். அதற்கு காரணம், தமிழ்சினிமாவில் அவருக்கு கிடைத்து வரும் ஆஃபர்களும், அதற்கு இணையான சம்பளமும்தான்.
இத்தனை அழகான ஒருவருக்கு கேன்சர் என்றால் எப்படியிருக்கும்? இந்த Shruthi Haasanபரிதாபத்தைதான் எதிர்பார்க்கிறார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும். இந்த கேன்சருக்கான மூலிகையை கண்டுபிடிக்க கால இயந்திரத்தில் ஏறி கி.மு. வுக்கு போகிறார் சூர்யா என்று போகிறது கதை. ஸ்ருதிக்கு போய் கேன்சரா? படத்தில் கூட அப்படி ஒரு நிலைமை வரக்கூடாதுப்பா என்ற கமல் ரசிகர்கள் கண்ணீர் வடிப்பார்கள் அல்லவா? அது போகட்டும்.... நிஜமாகவே கவலைப்பட வேண்டிய சமாச்சாரம் இது.
ஸ்ருதியின் பார்வையில் சிறு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதாம் சமீபகாலமாக. யார் அருகில் நின்றாலும் அவர்கள் மங்கலாகதான் தெரிகிறார்கள். அதே நபர் து£ரத்தில் நிற்கும்போதுதான் பளிச்சென்று தெரிகிறாராம். நெருங்கி வந்து கை கொடுக்கும் சிலரை உத்தேசமாக யூகித்துதான் பேசுகிறாராம் ஸ்ருதி.
விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து நிற்கிறது. இந்த கண் பிரச்சனையை அவர் சரி செய்து கொண்டிருக்கலாமே என்று கவலைப்படுகிறார்கள் இவற்றையெல்லாம் நேரில் காண்பவர்கள்.
கண்ணாடி போட வேண்டியிருக்கும். அல்லது லென்ஸ் பொறுத்த வேண்டியிருக்கும் என்று கவலைப்படுகிறாரோ என்னவோ?

அழகே உன்னை ஆராதிக்கிறேன்... - நடிக்க வரும் பாடகி ஸ்ரேயா கோஷல்?

'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்று சொல்வதில் தமிழ்சினிமாக்காரர்களுக்கு இணை அவர்களேதான். கொட்டிவாக்கத்தில் வசிக்கும் மயிலாக இருந்தாலும் சரி, கொரியாவில் பிறந்த குயிலாக இருந்தாலும் சரி, பார்க்க லட்சணமாக இருந்தால் நடிக்கிறீங்களா என்றொரு கொஸ்டீனை நீட்டி விடுவார்கள்.
அப்படி இவர்களால் அழைத்துவரப்பட்ட அநேக தேவதைகள் இன்று கோடம்பாக்கத்தில் Shreya goshalசம்பாதித்து உலகம் முழுக்க சொத்துக்களை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிக்கவே மாட்டேன் என்று முரண்டு பிடித்து வந்த அழகான பாடகி ஒருவரை எப்படியோ பேசி சம்மதிக்க வைத்திருக்கிறாராம் ஒரு இயக்குனர். அவர்? பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்.
பின்னணி பாடகிகளில் ஸ்ரேயா கோஷலின் குரலுக்கு மட்டுமல்ல, முகத்திற்கும் தனி அழகு உண்டு. மேடைக் கச்சேரிகளில் ஸ்ரேயா வந்தால் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது கூட்டம். அதற்கு குரல் மட்டும் காரணமல்ல என்பது அவருக்கும் தெரியும்.
இசையமைப்பாளர்கள் கூட ஸ்ரேயா கோஷல் சென்னை வந்தால் ஐந்து நட்சத்திர விடுதியில்தான் அறை ஒதுக்கிக் கொடுக்கிறார்கள். சம்பளமும் மற்றவர்களை விட சற்று அதிகம்தான். இவரைதான் தமிழ்ப்பட இயக்குனர் ஒருவர் பார்த்து நடிக்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். இப்போதைக்கு சம்மதித்திருக்கும் ஸ்ரேயா, தன் வீட்டாரும் ஒப்புக் கொண்டால்தான் அதை நிறைவேற்றுவாராம்.
அதுவரைக்கும் டைரக்டர் யார் என்பதும் ரகசியமாக இருந்துவிட்டு போகட்டுமே..

எப்படி கவிஞரானேன்? தனுஷ் விளக்கம்

மயக்கம் என்ன படத்தின் பாடல் வெளியிட்டு விழாவை அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் Selvaragavanநடத்தி முடித்த செல்வராகவன்-தனுஷ்-ரிச்சா குழுவினர், அதன்பின் சில தினங்கள் கழித்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். வரும்போதே மவுன லேகியம் சாப்பிட்டு வந்திருப்பார் போல. எந்தவொரு கேள்விக்கும் இரண்டு வரிகளுக்கு மிகாமல் பதிலளித்துக் கொண்டிருந்தார் செல்வராகவன். அதிலும் சில கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் அவர் சொன்ன பதில் ஷார்ப்.
படத்தில் வரும் ஒரு பாடலை செல்வாவும் தனுஷும் இணைந்தே பாடியிருக்கிறார்கள். அவர் வருவதற்கு சற்று முன்புவரை அந்த ஹாலில் ஒலித்த அந்த பாடல் இன்றைய இளசுகளை சுண்டி இழுக்கும் டைப். அப்படியிருந்தும், இனிமே சத்தியமா பாட மாட்டேன். மன்னிச்சுக்கோங்க என்று செல்வராகவன் புலம்பியதுதான் ஏனென்றே புரியவில்லை. ஏன் நீங்க பாடுனது உங்களுக்கே பிடிக்கலையா என்ற கேள்விக்கு, ரொம்ப நாராசமா இருந்திச்சு என்றார் அவர்.
அருகிலிருந்த மயக்கம் என்ன பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஒரு Selvaragavanகுடிகாரன் பாடுவது போன்ற சுச்சுவேஷன் அது. அதனால் இப்படி ஒரு குரல் இருந்தா பொறுத்தமா இருக்குமேன்னு செல்வாவை பாட வைத்தேன் என்றார். சில பாடல்களை தனுஷும் எழுதியிருக்கிறராம். .
எனக்கு ஏற்கனவே கதை தெரியும். அதனால் இந்த பாடலை எழுதுவதற்கு கவிஞர்களை தேடியபோது நானே எழுதுறேன். நல்லாயிருந்தா யூஸ் பண்ணுங்க. இலலைன்னா விட்டுடலாம் என்றேன். அப்புறம் நான் எழுதிய பாடல் வரிகளில் கொஞ்சம் கரெக்ஷன் பண்ணி என்னையும் கவிஞராக்கிட்டார் செல்வா என்றார் தனுஷ்.

பெயரை போட்டால் அவமானமா? சீறிய சோனா... சிதறிய ஃபிரண்ட்ஸ் டீம்!

கடந்த சில வாரங்களாகவே கலகலத்துக் கிடக்கிறது கோடம்பாக்கம். தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை, பெப்ஸி அமைப்பில் பிரச்சனை, போதாதற்கு மங்காத்தா கொண்டாட்டத்தில் மது விருந்து நடந்ததாகவும், இதில் நடிகை சோனாவை மானபங்கம் செய்ய முயன்றதாகவும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் குற்றச்சாட்டு.
கூட்டலும், கழித்தலுமாக இந்த பாலியல் விவகாரத்தை மட்டும் கர்ம சிரத்தையாக அலசிக் கொண்டிருக்கிறார்கள் மக்களும். என்னதான் நடந்தது? விசாரித்தால் தலை சுற்றிப் போகிறது நமக்கு.
மங்காத்தா படத்தின் வெற்றியை முழுமையாக கொண்டாடி தீர்த்தார்கள் அப்படத்தில் Premji amaran - Sona - Venkat Prabhuபங்குபெற்ற நடிகர்களான அரவிந்த், பிரேம்ஜி, அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் ஆகியோர். இவர்களுடன் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவும் சேர்ந்து கொண்டார். மங்காத்தா-வில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத எஸ்.பி.பி.சரணும், நடிகை சோனாவும் வெங்கட், பிரேம்ஜியின் நட்பு வட்டத்திற்குள் இருக்க, அவர்களும் வந்திருந்தார்கள்.
இந்த விருந்து மங்காத்தாவில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்திருந்த வைபவ் வீட்டில் நடந்தது. இந்த நண்பர்களுடன் சோனா சேர்வது புதிதல்ல. இதற்கு முன்பு பலமுறை விருந்து கேளிக்கைகள் என்று இவர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டிருக்கிறார் சோனா. ஆனால் கடந்த ஒரு வருடமாகவே மது அருந்துவதை முற்றிலும் நிறுத்தியிருந்தாராம் அவர். இந்த பார்ட்டிக்கு அவர் வந்ததே வெங்கட்பிரபுவுடன் பேச வேண்டும் என்பதால்தான்.
அதற்கு காரணமும் இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன் ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடு கட்ட வேண்டும் என்பதற்காக வெங்கட் பிரபு சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் வாங்கியிருந்தாராம் சோனாவிடம். (தற்போது இன்னொரு வீட்டை மைலாப்பூரில் சாய்பாபா கோவிலுக்கு பின்புறம் கட்டி வருகிறார் அவர்) தனது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கித் தர வேண்டும் என்பதற்காக சோனா கொடுத்த பணமாம் அது. ஆனால் இந்த பணத்தை வாங்கிய பிறகுதான் அவருக்கு ரஜினி மகள் சவுந்தர்யா தயாரித்த கோவா படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தது.
கோவாவை முடித்துவிட்டு உங்களுக்கு படம் இயக்கி தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பினார் வெங்கட். நினைத்த மாதிரியே படமும் முடிந்தது. படம் வெளியாகிற நேரத்தில், வெங்கட்டின் அட்வைஸ்படி கோவா படத்தின் ஒரு ஏரியாவையும் வாங்கி விநியோகம் செய்தார் சோனா. அதில் பலத்த அடி. சரி போகட்டும்... இது நண்பனுக்காக என்று அதையும் பொறுத்துக் கொண்ட சோனா அடுத்த படம் நமக்குதான் என்று காத்திருந்தார்.
ஆனால் மீண்டும் சோதனை. அஜீத்தே வெங்கட்பிரபு படத்தில் நடிக்க விரும்ப, ஒரே Actress Sonaநாளில் உச்ச இயக்குனரானார் வெங்கட்பிரபு. அப்போதும் நண்பனுக்காக தனது படத்தை தள்ளிப் போட்டார் சோனா. நினைத்த மாதிரியே படம் வெளிவந்தது. பெரிய ஹிட். ரஜினி படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் கிடைத்தது மங்காத்தாவுக்கு. கலெக்ஷனும் இதுவரை அஜீத் படம் அறியாதது.
இதையடுத்து மீண்டும் வெங்கட்பிரபுவுடன் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்று விரும்பினாராம் அஜீத். பில்லா-2 க்கு பிறகு விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டு மீண்டும் வெங்கட்பிரபுவுடன் இணைவது என்று முடிவெடுத்திருந்தார் அஜீத். ஏற்கனவே வெங்கட்பிரபுவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கும் சோனா, இந்த படத்தை நாமே தயாரிக்கலாமே என்று நினைத்தார். அங்குதான் சோதனை ஆரம்பித்தது.
வெங்கட்பிரபுவும் சரணும் நெடுநாளைய நண்பர்கள். தொடர்ந்து மூன்று படங்களை தயாரித்து கடும் கடன் நெருக்கடியில் இருக்கும் சரண், வெங்கட்பிரபுவின் தற்போதைய வெற்றியை பயன்படுத்தி அதிலிருந்து மீண்டு விடலாம் என்று ஒரு கணக்கு போட, ஆரம்பித்தது மங்காத்தா ஆட்டம்.
மேற்படி விருந்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. நிதானமாக பேசினாலே நாக்கு திருகும் சில நேரத்தில். இதில் மது வேறு. என்னாகும்? சோனாவின் மனசே கிழிந்து போகிற மாதிரி பேசினார்களாம் அங்கே. ஒரு கவர்ச்சி நடிகைக்கு நான் படம் இயக்கி தருவதா? அவமானம். வேணும்னா வேறு ஒரு பினாமி பெயரில் படம் தயாரிங்க. நான் இயக்கி தருகிறேன் என்று வெங்கட்பிரபு கூறியதாக தெரிகிறது. சரணிடம் அந்த கால்ஷீட்டை மாற்றிவிடுங்க. அதற்கான பணத்தை வட்டியோடு வசூல் பண்ணிக்கலாம் என்று அவரே ஒரு திட்டமும் வகுத்து கொடுத்தாக சொல்கிறார்கள்.
வெங்கட்பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்கள் வட்டாரத்தை எங்கெங்கோ சுற்றுலா அழைத்து சென்றிருக்கிறாராம் சோனா. இவரது பணத்தில்தான் அவர்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் என்னை கவர்ச்சி நடிகை என்று நினைக்காதவர்கள் இப்போது மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும்? இதுதான் சோனாவின் மன உளைச்சல் என்கிறது சோனா வட்டாரம்.
அந்த பார்ட்டியில் என்ன நடந்தது? ஏன் சிக்கினார் எஸ்.பி.பி.சரண்? என்பதை S.P.Balasubramaniam - Sonaபற்றியெல்லாம் ஆராய்ச்சிக்கு போகாமல் தற்போது நடப்பது என்ன என்பதை பற்றி மட்டும் விசாரித்தால், அதுவும் பெரிய கேம் ஷோவாக இருக்கிறது.
முதல் நாள் பார்ட்டி முடிந்ததும் எப்படியும் தன்னை சமாதானப்படுத்த வெங்கட், பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்கள் வருவார்கள் என்பது தெரிந்து தனது வீட்டுக்கு போகாமல் நடிகை ரம்யாகிருஷ்ணன் வீட்டுக்கு போய் விட்டார் சோனா. செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாராம்.
இவரை சமாதானப்படுத்த முயன்றவர்கள் அது முடியாமல் போக என்ன செய்வதென்று கை பிசைந்து நிற்கிற நேரத்தில்தான் பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனில் சரண் மீது புகார் கொடுத்திருந்தார் சோனா. அன்று மாலையே தினசரி நிருபர்களை அழைத்து சுட சுட பேட்டியும் கொடுத்துவிட்டார். சரண் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டவுடன் ஐதராபாத்திலிருந்து அவசரம் அவசரமாக சென்னைக்கு ஓடிவந்தார் பாடகர் எஸ்.பி.பி.
காவல் நிலையத்தில், நீங்க சரண் மீது பாலியல் புகார் கொடுக்கிறீங்க. ஆனால் அதுக்கு ஆதாரம் வேணுமே. ஏதாவது புகைப்பட பதிவு இருக்கா, வாய்ஸ் டேப் இருக்கா என்றெல்லாம் கேட்டார்களாம் சோனாவிடம். இது எதுவுமே இல்லாமல் விழித்திருந்த அவரிடம் வசமாக சிக்கினார்கள் சரண் குடும்பத்தினர்.
சோனாவை சந்திச்சு நானே பேசுறேன் என்றாராம் எஸ்.பி.பி. இதை தொடர்ந்து ஓரிடத்திற்கு வரச்சொன்னார் சோனா. ஆனால் முன்பே அங்கு வாய்ஸ் ரெக்கார்டரை மறைத்து வைத்திருந்தாராம். இதையெல்லாம் அறிந்து கொள்ளாத எஸ்.பி.பி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ் ஆகிய நால்வரும் சோனாவிடம் நடந்த தவறுகளுக்கு பலவிதத்தில் சமாதானம் பேசினார்களாம். என் மகனையே பிரஸ்சுக்கு முன்னாடி வரச்சொல்லி பொதுமன்னிப்பு கேட்க சொல்றேன். வழக்கை வாபஸ் வாங்கும்மா என்றாராம் எஸ்.பி.பி.
இந்த வாய்ஸ்கள் எல்லாவற்றையுமே ஆதாரமாக பதிவு செய்து கொண்டாராம் சோனா. அதுமட்டுமல்ல, இவர் காவல் நிலையத்திற்கு போகிறார் என்பது தெரிந்ததுமே, வைபவ் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாராம் சோனாவுக்கு. அதில், பார்ட்டி என் வீட்டில் நடந்ததா போலீஸ்ல சொல்லிடாதே, என் அம்மா என்னை கொன்னுடுவார் என்று புலம்பியிருந்தாராம். அதையும் இந்த வழக்கின் சாட்சியாக சேர்த்துக் கொள்கிற முடிவிலிருக்கிறாராம் சோனா.
இதற்கிடையில் இந்த விஷயம் எல்லாவற்றையும் ஐதராபாத்திலிருக்கிற அஜீத்தும் கேள்விப்பட்டு செம அப்செட். வெங்கட்பிரபுவை அழைத்தவர் இந்த பார்ட்டி மங்காத்தா பார்ட்டின்னு இனிமே பேசினா நல்லாயிருக்காது என்று எச்சரிக்க, உடனே தனது ட்விட்டரில் 'அது மங்காத்தா பார்ட்டி அல்ல' என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் வெங்கட். அது மட்டுமல்ல, இது நண்பர்களுக்குள் நடந்த விஷயம். சீக்கிரம் சரியாகிவிடும் என்று ட்விட் பண்ணியிருக்கிறார் அவர்.
ஆனால் அவ்வளவு சீக்கிரம் முடிவதாக இல்லை விவாகாரம். லேசான மாரடைப்பு என்று மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கும் சோனா இப்போது மருத்துவமனையில். 'இதுபற்றி நிறைய பேசிட்டேன்' என்ற சோனாவிடம், 'எஸ்.பி.பி உங்களை பார்த்துட்டு போயிருக்காரே?' என்றோம்.
'ஆமாம். நான் அவரை ரொம்பவே மதிக்கிறேன். அன்னைக்கு நான் பட்ட காயத்திற்கு எங்கு போய் மருந்து போடுவது? வழக்கை வாபஸ் வாங்கும் எண்ணத்தில் நான் இல்லை என்று மட்டும் போடுங்க' என்று கூறி முடித்துக் கொண்டார்.
-ஆர்.எஸ்.அந்தணன்
thanks:http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/sep/220911.asp

ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான்... சரணுக்கு சோனா வைத்த கெடு

ஏன் இப்படி நடந்து கொள்கிறார் சோனா என்பதை இன்று நமது இணையதளத்தில் வெளியான வேறொரு கட்டுரையில் வெளியிட்டிருக்கிறோம். சம்பவத்திற்கு ஆதாரத்தை அவர் பின்பு எப்படி திரட்டினார் என்பதையும் கூறியிருந்தோம். இந்த நிலையில் இன்று காலை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தார் சோனா. அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
பின்னர் சோனா நிருபர்களிடம் கூறுகையில், "எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் Charan - Sonaபலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். இன்று கமிஷனரை சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன். வீடியோவை எனது லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருந்தேன். அதனை கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டேன். நான் பணத்துக்கு ஆசைப்பட்டும் விளம்பரத்துக்காகவும் சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன்," என்றார்.
அவரிடம், "இயக்குனர் வெங்கட் பிரபு உங்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டாரா?" என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு சோனா, "இரண்டு முறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று அறிக்கை விடுமாறு சரண் தரப்பில் என்னிடம் வற்புறுத்தப்பட்டது. நான் ஏன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டேன். இதனால் சமரச பேச்சு வெற்றி பெறவில்லை. சரண் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லா விட்டால் நான் விடமாட்டேன்," என்றார்.
"வீடியோ ஆதாரம் மது விருந்தில் எடுக்கப்பட்டதா?" என்று கேட்டபோது, "அது பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. பத்து நாட்களுக்குள் சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிறது. நாளை பார்ப்போம்," என்றார்.

இப்படியா செய்வது? டைரக்டரை கடிந்து கொண்ட சூர்யா


'மாற்றான்' படப்பிடிப்புக்காக லண்டனுக்கு போயிருக்கிறார்கள் கே.வி.ஆனந்த் மற்றும் படப்பிடிப்பு குழுவினர். சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா. இதை போய் பெரிசு பண்ணுறாங்களே என்று படம் சம்பந்தப்பட்டவர்கள் புலம்புகிற மாதிரி ஒரு நியூஸ் கிளம்பியிருக்கிறது Suryaகோடம்பாக்கத்தில். வேறொன்றுமில்லை, சூர்யா-கே.வி.ஆனந்த் இருவருக்கும் இடையிலான துளியூண்டு பிணக்குதான் அது.
பொதுவாக ஒரு படத்தை துவங்கும்போதே படத்தின் ஹீரோ, ஹீரோயின் மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடிப்பவர்களுக்கான தேதிகளை குறித்துக் கொடுத்துவிடுவார் டைரக்டர். அப்படி ஒதுக்கிய தேதிகளை பார்த்துதான் முகத்தில் கடுகு பொறித்தாராம் சூர்யா.
மாதத்திற்கு பத்து நாட்கள் மட்டும் சூர்யா கால்ஷீட் தேவைப்படுவது போல பிரேக் டவுன் போட்டிருந்தாராம் கே.வி.ஆனந்த். பிசியான ஹீரோக்கள் மாதத்திற்கு முப்பது நாட்கள் நடிக்க சொன்னாலும் நடித்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு போக வேண்டுமே என்ற வேகம் மனசையும் உடம்பையும் இயக்கிக் கொண்டேயிருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு ஹீரோவிடம் மாதம் பத்து நாட்கள் மட்டும் படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றால் என்னாகும்? நான் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வைத்திருக்கிறேன். சீக்கிரம் படத்தை முடிச்சுட்டு என்னை அனுப்பிவீங்க என்று நினைத்தால் இப்படி பண்றீங்களே என்றாராம் சூர்யா.
அப்புறம் என்ன? அடித்து திருத்தி மாதம் முழுக்க நடிக்கிற மாதிரி தேதிகளை திருத்திக் கொண்டிருக்கிறாராம் ஆனந்த்

ஆத்திரத்தில் பிரகாஷ்ராஜ் ஆந்திரா படவுலகில் சர்ச்சை

தமிழ்சினிமாவின் முடிசூடா குணச்சித்திர நடிகரான பிரகாஷ்ராஜ் ஒரு முடி(விக்) பிரச்சனை காரணமாக மாற்றான் படத்திலிருந்தே நீக்கப்பட்டார்.
நான் நடிக்காததை என் முடியா வந்து நடிக்கப் போகிறது என்றாராம் அவர். என் Prakash Rajமுகத்தை கொடூரமாக காட்டுகிற முயற்சிதான் இது என்றெல்லாம் பிற்பாடு இந்த சம்பவம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாக தகவல். போகட்டும். பிரச்சனை இந்த படத்தோடு முடிந்தால் பரவாயில்லை. வெவ்வேறு படங்களிலும் தொடர்வதுதான் ஏன் என்று புரியாமல் தடுமாறுகிறார்கள் அவரது வெல் விஷர்கள். அத்தனை பேரும் அதிர்கிற மாதிரி அப்படி என்னதான் செய்துவிட்டார் அவர்?
கேட்டால் நொந்தே போவீர்கள். தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் சீனு வட்லா என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ். படப்பிடிப்பில் இருந்தவரை ஷாட்டுக்கு வரச்சொல்லி உதவி இயக்குனர் ஒருவர் அழைக்க, அவரை பாஸ்டர்ட் என்று திட்டினாராம் பிரகாஷ்ராஜ்.
அதிர்ச்சியடைந்த உதவி இயக்குனர் மெல்ல அவரது அருகில் போய் சார் இப்படியெல்லாம் திட்டாதீங்க என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ்ராஜ், பாஸ்டர்ட் பாஸ்டர்ட் என்று யூனிட்டுக்கே கேட்கிற மாதிரி எழுந்து நின்று திட்ட, பெரும் கோபமடைந்தாராம் உதவி இயக்குனர். அவரும் பதிலுக்கு அதே வார்த்தையால் திட்டி தீர்க்க, பெரும் களேபரமாகிவிட்டது.
இந்த சண்டையில் இயக்குனர் தலையிடாமல் வேடிக்கை பார்த்தாராம். இது மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது பிரகாஷ்ராஜுக்கு. சட்டென்று படப்பிடிப்பிலிருந்து கிளம்பிவிட்டாராம். இப்போது வேறொரு நடிகரை அந்த கேரக்டரில் நடிக்க வைக்கப் போகிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் வேண்டாம் -முடிவெடுத்த இயக்குனர்கள்

தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் மயக்கம் என்ன படத்தோடு ஜி.வி.பிரகாஷின் உறவை முறித்துக் கொள்ளும் முடிவிலிருக்கிறாராம் செல்வராகவன். அடுத்து ஆர்யா-G.V.Prakashஅனுஷ்கா நடிக்கும் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜை புக் பண்ணியிருக்கிறாராம். தெய்வ திருமகள் விஜய்யும் தன் அடுத்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜைதான் நாடியிருக்கிறார்.
ஆடுகளம், தெய்வ திருமகள் ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அப்பட்டமான காப்பி என்பதை இணையதள பயன்பாட்டாளர்கள் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்கள். இந்தந்த பாடல்கள் இதிலிருந்து சுடப்பட்டவைதானே என்ற நிருபர்களின் கேள்விக்கு பிரகாஷ் சொன்ன ஒரு பதில்தான் இவ்விருவரையும் இந்த முடிவெடுக்க வைத்ததோ என்னவோ?
நான் சொந்தமாக ட்யூன் போட தயாராதான் இருந்தேன். ஆனால் விஜய்யும், வெற்றிமாறனும்தான் இந்த பாட்டு வேணும்னு வந்து கேட்டாங்க. அதை அப்படியே போட்டுக் கொடுத்தேன் என்று கூறியிருந்தார் அவர்.
வெற்றிமாறன் எப்படியோ? பிரகாஷின் ஃபேஸ்புக்கில் இப்போது இருவரின் இடம்தான் 'லாஸ் லுக்' ஆகிவிட்டது.

தயாரிப்பாளர் சங்கத்தின் பொழுக்குழு நாளை நடக்குமா என பரபரப்பு...

ஆதரவு எந்தளவுக்கு இருக்கிறதோ, அதைவிட கூடுதலாக எதிர்ப்பை சம்பாதித்து வைத்திருப்பார் போலிருக்கிறது தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர். மீண்டும் தேர்தல் வேண்டும் என்று ஒரு குழுவினர் S.A.Chandrasekarபோராடிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலே வேண்டாம். பொதுக்குழுவை கூட்டி ஆதரவை நிரூபித்து நானே தலைவராக நீடிப்பேன் என்று முண்டா தட்டிக் கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. இந்த போராட்டத்தின் முடிவு எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்குள் நாலைந்து மண்டைகள் உடையும் போலிருக்கிறது.
செப்டம்படர் 4 ந் தேதி பொதுக்குழு என்று அறிவித்துவிட்டார் எஸ்.ஏ.சி. அதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது. திடீரென்று எதிர் முகாமை சேர்ந்த பாபு கணேஷ் என்ற தயாரிப்பாளர், சென்னை நகர காவல் துறை ஆணையர் திரிபாதியை சந்தித்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் பற்றிய தனது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார். அவர் கொடுத்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்ன?
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 4-ந் தேதி அன்று நடைபெறும் என்று அதன் தலைவராக தன்னை பிரகடனம் செய்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக சென்னை 5-வது சிட்டிசிவில் கோர்ட்டில் வழக்கு உள்ளது. 5-ந் தேதி அன்று அந்த வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.
அதற்குள்ளாக எஸ்.ஏ.சந்திரசேகரன் 4-ந் தேதி அன்று பொதுக்குழுவை கூட்டியிருக்கிறார். பொதுக்குழு கூட்டம் ஆயிரம் விளக்கில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தில் 200 பேர்தான் உட்கார முடியும். ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் 1900 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கண்டிப்பாக அந்த கூட்டத்தில் தகராறு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அதை தடை செய்யவேண்டும்.
இதையடுத்து காவல் துறையினர் தலையிட்டு இடத்தை மாற்றும்படி உத்தரவிட்டுள்ளனராம். எனவே இந்த பொதுக்குழு தள்ளி வைக்கப்படும் போல தெரிகிறது. இதற்கிடையில் எஸ்.ஏ.சி க்கு எதிராக திரண்டிருக்கும் சில தயாரிப்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஒரு மனு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
முதல்வரான உங்கள் பெயரை எஸ்.ஏ.சி தவறான முறையில் பயன்படுத்தி அப்பாவி தயாரிப்பாளர்களை அச்சுறுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

18 கோடியே 95 லட்சம்! மங்காத்தாவின் தமிழக உரிமை?


மங்காத்தா படத்திற்கு வந்த முதல் நாள் கூட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் பிரமிக்க
வைத்திருக்கிறது. ரஜினி படங்களுக்கு வருகிற அதே கூட்டம் அஜீத்
படத்திற்கும் வந்தது. இதையடுத்து அடுத்த சூப்பர் ஸ்டார் நாற்காலி யாருக்கு
என்ற கேள்வியும், அது குறித்த விமர்சனங்களும் எழ ஆரம்பித்திருக்கிறது
கோடம்பாக்கத்தில்.

அஜீத் பட வெற்றியை அவரேதான் முறியடிக்க
வேண்டும் என்பது போல இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தின் தமிழ்நாடு
வெளியீட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாம். இதன் மதிப்பு மொத்தம் 18 கோடியே 95
லட்சம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

பந்தின் வடக்கு பக்கம் காற்றடித்தால்
தெற்கு பக்கமும் வீங்கும் என்பது போல, இந்த படத்தின் விலையை கருத்தில்
கொண்டு டிக்கெட் விலையை பன் மடங்கு உயர்த்தி விற்க சொல்கிறார்களாம்
விநியோகஸ்தர்கள். இதற்கு அநேக தியேட்டர்கள் சம்மதித்தாலும், சென்னையில்
இயங்கி வரும் கார்ப்பரேட் தியேட்டர்கள் மட்டும் கைகட்டி வாய் பொத்தி
நிற்கிறதாம். அரசு நிர்ணயித்த விலையை தாண்டி விற்க முடியாது என்று இவர்கள்
கூறி வருவதால் செய்வதறியாது திகைக்கிறார்களாம் விநியோகஸ்தர்கள்.

இது ஒருபுறம் இருக்க, படம் ஹிட் என்றால்
திருப்பதியில் மொட்டை என்று வேண்டியிருந்த டைரக்டர் வெங்கட்பிரபு தனது
பிரார்த்தனையை நிறைவேற்றிவிட்டு வந்திருக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு
மொட்டை போட்டே பழகிய சில இயக்குனர்கள் வெங்கட் பிரபுவை பார்த்தாவது
மாறுவார்களா?